×

நான் அமெரிக்க அதிபராக இருந்து இருந்தால் இஸ்ரேல் தாக்கப்பட்டு இருக்காது :டொனால்டு ட்ரம்ப்

வாஷிங்டன் : இஸ்ரேலுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறியுள்ள டொனால்டு ட்ரம்ப், தாம் அமெரிக்க அதிபராக இருந்து இருந்தால் இஸ்ரேல் தாக்கப்பட்டு இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், 2024 அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சியின் வேட்பாளர் ரேஸில் முன்னணியில் உள்ளார். இதனிடையே நியூயார்க் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் தம் மீதான சிவில் மோசடி வழக்கு விசாரணைக்கு ட்ரம்ப் நேரில் ஆஜரானார். போலி வணிக பதிவு விவகாரத்தில் ட்ரம்ப் பொய் கூறினாரா என சாட்சியிடம் அரசு தரப்பு குறுக்கு விசாரணை நடத்தியபோது, ட்ரம்ப் கூச்சலிட்டதால் நீதிபதி அவரை எச்சரித்தார். உணவு இடைவெளியின் போது, செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், தாம் அமெரிக்க அதிபராக இருந்து இருந்தால் இஸ்ரேல் தாக்கப்பட்டு இருக்காது என்றார்.

மேலும் இஸ்ரேலுக்கு செல்வீர்களா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த ட்ரம்ப், “நான் போக வாய்ப்புள்ளது. எனது மகள்கள் சென்றுள்ளனர்.இஸ்ரேல் செய்ய வேண்டியதைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என என நாள் நினைக்கிறன்.அவர்கள் அதனை சரி செய்ய வேண்டும்,”என்றார். வணிக பதிவுகளை போலியாக தயாரித்து மோசடி செய்ததற்காக 2000 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் விதித்து ட்ரம்பின் நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் நீதிமன்றம் அழைக்காத போதும் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஆஜரான ட்ரம்ப், சிவில் மோசடி வழக்கு விசாரணையால் தனது தேர்தல் பரப்புரை பாதிக்கப்படுவதாக நீதிபதியிடம் முறையிட்டார்.

The post நான் அமெரிக்க அதிபராக இருந்து இருந்தால் இஸ்ரேல் தாக்கப்பட்டு இருக்காது :டொனால்டு ட்ரம்ப் appeared first on Dinakaran.

Tags : Israel ,US ,Donald Trump ,Washington ,Dinakaran ,
× RELATED நீடிக்கும் இஸ்ரேல் – காசா போர்;...